மேலும் செய்திகள்
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
5 minutes ago
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
10 minutes ago
கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு நடந்த பாராட்டு விழாவில், மாணவரின் முழு கல்வி செலவையும் ஏற்பதாக பள்ளியின் நிறுவனர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நிறுவனர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாபு வரவேற்றார். ஆசிய அளவில் 27வது இளம்வீரர்களுக்கான செஸ் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தாய்லாந்தில் நடந்தது. பல்வேறு பிரிவினருக்கு தனி, தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஜே.எஸ்., பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும், எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் மகன் தமிழமுதன் என்ற மாணவர் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றார். கிளாசிக்கல், ரேப்பிட், பிளிட்ஸ் என 3 வகையில் நடந்த போட்டியில் பங்கேற்ற தமிழமுதன் 4 வெள்ளி பதக்கங்களையும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்று இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த மாணவன் தமிழமுதனுக்கு ஜே.எஸ்., பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவன் தமிழமுதன் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிப்பதற்கான முழு கல்வி செலவையும் சின்னப்பொண்ணு அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ஏற்றுக்கொள்வதாகவும், அடுத்தடுத்த செஸ் போட்டியில் பங்கேற்று தமிழமுதன் சாதனை படைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார் தெரிவித்து, பரிசுகளை வழங்கினார். அப்போது, பெற்றோர்கள் சதீஷ், உமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
5 minutes ago
10 minutes ago