உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கனியாமூரில் மேல்நிலைத் தொட்டிக்கு பூமிபூஜை

கனியாமூரில் மேல்நிலைத் தொட்டிக்கு பூமிபூஜை

கள்ளக்குறிச்சி : கனியாமூரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பைப் லைன் மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.சின்னசேலம் அடுத்த கனியாமூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ரவிசங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் முருகேசன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப்லைன் மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்ட பூமிபூஜை நடந்தது.ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத்தலைவர் சுகுணா வீராசாமி, கிளைச் செயலாளர் ராஜா, ராஜிவ்காந்தி, ஊராட்சி செயலாளர் கோவிந்தன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ