மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
கள்ளக்குறிச்சி : மேல்நாரியப்பனுார் கிராமத்தில் ரூ.54.50 லட்சம் மதிப்பில் இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை நடந்தது.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுதாமணிகண்டன், ஒன்றிய பொறியாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தன் வரவேற்றார். மேல்நாரியப்பனுாரில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடையின்றி நாள் முழுவதும் குடிநீர் கிடைக்கும் வகையில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.54.50 லட்சம் மதிப்பில் இரண்டு 60 ஆயிரம் லிட்., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்ட பூமிபூஜை நடந்தது. சேர்மன் சத்தியமூர்த்தி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்தி ராமலிங்கம், தி.மு.க., கிளை செயலாளர்கள் வரதன், பெரியசாமி, சக்திவேல், இளைஞரணி நிர்வாகி மணிபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago