உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ஆஞ்ச நேயர் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீ சார் விசாரிக்கின்றனர்.சின்னசேலம் பஸ்நிலையம் அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. கோவில் திறந்திருக்கும் நேரங்களில் உண்டியல் வெளியே வைக்கப்படும். இரவு கோவில் மூடும் போது உள்ளே எடுத்து வைப்பர்.கடந்த 1ம் தேதி இரவு 9:00 மணியளவில் பூசாரி சவுந்தர்ராஜன் வழக்கம்போல் உண்டியலை கோவிலுக்குள் வைத்து பூட்டி சென்றுள்ளார். தொடர்ந்து, நேற்று அதிகாலை 5:00 மணியளவில் கோவிலை திறந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்த கோவில் தர்மகர்த்தா சுரேஷ், சின்னசேலம் போலீசார் கோவிலுக்கு சென்று அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். புத்தாண்டு தினத்தன்று அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தியதால், உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என பூசாரி தெரிவித்தார்.உண்டிலை உடைத்து பணம் திருடி சம்பவம் குறித்து சின்னசேலம் போலீ சார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ