உள்ளூர் செய்திகள்

பா.ஜ., பிரசார கூட்டம்

திருக்கோவிலுார்: விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சார்பில் தேவனுாரில் நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பா.ஜ., பிரசார கூட்டம் நடந்தது.முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவனுார், கொல்லுார், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலிவரதன், பொதுச் செயலாளர் முரளி சதாசிவம் தலைமை தாங்கினர்.சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தரவு மேலாண்மைப் பிரிவு கார்த்திகேயன், துணைத் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர்.பா.ஜ., எம்.பி., பிரிஜிலால், மத்திய அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி, அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், புவனேஸ்வரி, நகர செயலாளர் பத்ரிநாராயணன், ஏழுமலை, அழகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி