உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் ரத்த தான முகாம்

சங்கராபுரத்தில் ரத்த தான முகாம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார்.மருத்துவ அலுவலர்கள் விஜயகுமார், சுகன்யா, கல்லுாரி செயலாளர் பினியன் மேரி, துணை முதல்வர் லில்லி மேரி, சங்கராபுரம் ரோட்டரி தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.முகாமில் கல்லுாரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 30 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.துணை ஆளுனர் வெங்கடேசன், முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், சந்திரன், வள்ளி மற்றும் சுகாதார செவிலியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ