உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா தலைமை தாங்கினார். ரத்த வங்கி அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் ரத்ததானத்தின் அவசியம், நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.முகாமில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் 25 யூனிட் ரத்த தானம் செய்தனர்.பெறப்பட்ட ரத்தம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் வந்தனா, தேவி, நீலகண்டன், சுகாதார ஆய்வாளர் தெய்வீகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ