உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புத்தக கண்காட்சி: கலெக்டர் ஆய்வு

புத்தக கண்காட்சி: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏ.கே.டி., பள்ளி மைதானத்தில் இரண்டாமாண்டு புத்தக கண்காட்சி நடக்கிறது. இதில், 100க்கும் மேற்பட்ட அரங்குகளில், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான புத்தகம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாட புத்தகம், சிந்தனையைத் துாண்டும் எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் புத்தகம், தமிழ் இலக்கணம், சமையல் குறிப்பு புத்தகங்கள், அறிவியல், சங்க இலக்கியங்கள், சிறுகதைகள், நாவல்கள் என அனைத்து வகையான புத்தகங்களும் காட்சிபடுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.புத்தக கண்காட்சியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது: புத்தக கண்காட்சியில் தமிழ் சிந்தனையாளர்களின் சிறப்பு பட்டிமன்றம், கருத்தரங்கம், பல்சுவை நிகழ்ச்சிகள், இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.அனுமதி இலவசம். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்திட பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் 19ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ