மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா எறையூர் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி ஜாஸ்பின்மேரி, 32;. அதே பகுதியை சேர்ந்தவர் அமுல்ராஜ் மனைவி ஜுனாஜாஸ்மின், 40; இருவருக்கும் ஏல சீட்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 26ம் தேதி ஜாஸ்பின்மேரி வீட்டிற்கு சென்று ஜீனாஜாஸ்பின், பணம் கேட்டுள்ளார். இதில் ஆவேசமடைந்த ஜீனாஜாஸ்பின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜாஸ்பின்மேரியை ஆபாசமாக திட்டி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ஜாஸ்பின்மேரி கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் ஜீனாஜாஸ்பின், அமுல்ராஜ், 47; முனியப்பன் மனைவி லெமரி, 41; அந்தோணி, 32; ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago