| ADDED : ஜன 14, 2024 05:08 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்தனர்.அதன்படி சின்னசேலத்தில் 4 பேர், கீழ்குப்பம் 2, வரஞ்சம் 2, கச்சிராயபாளையம் 2, மற்றும் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் மீது என 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.