| ADDED : நவ 23, 2025 04:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட முன்விரோத தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை சேர்ந்தவர் சாமிநாதன், 50; அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார், 32; இருவரது குடும்பத்திற்கும் வீட்டு மனை சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தடி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் லட்சுமி, முத்துகுமார், சேகர், பாண்டியன், சோலை முத்து, பாலு ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பில் நாகராஜ், சாமிநாதன், கஸ்துாரி, அன்பரசு, அய்யப்பன், மொட்டையன் ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.