உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருக்கோவிலுார் : மாவட்ட சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், திருக்கோவிலுார் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கீதா, நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைவர் சந்தோஷ் குமார், அலுவலர் கலைச்செல்வி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அஞ்சலை ஆகியோர் குழந்தை பாதுகாப்பு குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை நகராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை