உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுற்றுச்சூழல் பாதிக்காமல் போகி கலெக்டர் வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதிக்காமல் போகி கலெக்டர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு போகி பண்டிகை கொண்டாட கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:போகி பண்டிகை நாள் அன்று, வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும், என்ற அடிப்படையில் போகிப் பண்டிகைகொண்டாடுவது வழக்கம்.ஆனால் தற்போது, பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்களைஎரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.எனவே, போகிப் பண்டிகை என்பது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை