உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆதார் சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

 ஆதார் சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆதார் சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கே பிள் டிவி நிறுவனம் சார்பில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலுார், கல்வரா யன்மலை, உளுந்துார்பேட்டை, வாணாபுரம் ஆகிய தாலுகா அலுவலங்களில் ஆதார் நிரந்தர பதிவு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், சங்கராபுரம், திருநாவலுார், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள், எலவனாசூர்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல்படுகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, சிட்டி யூனியன் வங்கி, சங்கராபுரம் இந்தியன் வங்கி, செங்குறிச்சி சிட்டி யூனியன் வங்கி, உளுந்துார்பேட்டை பேங்க் ஆப் இந்தியா வங்கியில் செயல்படுகிறது. சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி-4, வாணாபுரம்-3 (மூங்கில்துறைப்பட்டு, ரிஷிவந்தியம், அரியலுார்), திருக்கோவிலுார்-2, உளுந்துார்பேட்டை-3 (களமருதுார், உளுந்துார்பேட்டை, திருநாவலுார்) ஆகிய தபால் நிலையங்களில் செயல்படுகின்றன. மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் சின்னசேலம், சங்கராபுரம் (சங்கராபுரம், ஆலத்துார்), கள்ளக்குறிச்சி நகரம், உளுந்துார்பேட்டை(உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி, பிடாகம், காட்டுச்செல்லுார், ஆசனுார்) ஆகிய பகுதியில் செயல்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (பிறந்த குழந்தை முதல் 5 வயது பதிவு) சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலுார், கல்வராயன்மலை, உளுந்துார்பேட்டை பதிவு மையங்களில் செயல்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதார் சேவை மையங்களிலும் ஆதார் நிரந்தர பதிவு, மொபைல் எண் இணைத்தல் மற்றும் மாற்றுதல், முகவரி திருத்தம், பயோமெட்ரிக் புதுப்பித்தல், குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள ஆதார் சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்