உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பொது கணக்கு குழு 24ம் தேதி ஆய்வு பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அழைப்பு

 பொது கணக்கு குழு 24ம் தேதி ஆய்வு பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 24ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ள சட்டசபை பொது கணக்குக்குழுவினரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: சட்டசபை 2024-2026ம் ஆண்டிற்கான பொது கணக்குக்குழு ஆய்வு வரும் 24ம் தேதி நடக்கிறது. குழுத்தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர் மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மதியம் அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல். ஏ.,க்கள் காந்திராஜன், நந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, அப்துல் சமது, ராமச்சந்திரன், எழிலரசன், ஐயப்பன், சந்திரன், சரஸ்வதி, சிவக்குமார், செந்தில்குமார், சேகர், சேகர், விசுவநாதன், பழனியாண்டி, முகமது ஷாநவாஸ், ஜெயராம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆய்வு மேற்கொள்ள வரும் சட்டசபை பொது கணக்குக் குழுவினரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்