உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

 இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கி இந்திய அரசியலமைப்பு அறிந்திருப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். கல்லுாரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் நவீன் முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். தொடர்ந்து முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் ரகுபதி இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி வாசகங்களை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கணினி பயன்பாட்டியல் துறை உதவிபேராசிரியர் கயல்விழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி