| ADDED : ஜன 02, 2026 04:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவருக்கு மாவட்ட கட்டட தொழிலாளர்கள் சங்கத்தினர் பரிசு வழங்கி பாராட்டினர். முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கட்டட தொழிலாளர்கள் சங்கத்திற்கென புதிய கட்டடத்தை 13வது வார்டு பகுதியில் கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்ராயலு தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்தார். மேலும் கட்டட தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் நகரமன்ற தலைவருக்கு கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரகு, செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், நகர மன்ற தலைவருக்கு ஐம்பொன்னால் ஆன கொத்தனார் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், கவுன்சிலர்கள் விஜயகுமாரி கலைச்செல்வன், செல்வம், ஜெயராமன், தி.மு.க., நகர ஓட்டுநர் அணி அமைப்பாளர் ராம்கி, மாணவரணி துணைச் செயலாளர் விக்னேஷ், வார்டு இளைஞரணி அமைப்பாளர் மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.