உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்

 போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கராபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமை தாங்கி பேசியதாவது : சங்கராபுரம் கடைவீதியில் விளம்பர போர்டுகள் வைக்க கூடாது. அவ்வாறு வைக்கப்பட்டால் நிகழ்ச்சி நடந்து 3 நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஒன்றை, சாலையை பார்த்தவாறு வைக்க வேண்டும். இவ்வாறு சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் பேசினார். கூட்டத்தில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், குசேலன், ராஜேந்திரன், தயானந்தன், வியாபாரிகள் முன்னாள் தலைவர் ரவி, மில்கா ரவி, சீனிவாசன், நுகர்பொருள் விநியோக சங்க தலைவர் சீனிவாசன், வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்