உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைப்பதிவாளர் ஆய்வு

 கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைப்பதிவாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கொங்கராயபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சங்க வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையம், குடோனில் உள்ள உரங்களின் இருப்பு விபரம், பதிவேடுகள், தினசரி பராமரிக்கப்படும் கோப்புகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை விபரம், விவசாயிகளுக்கு சரியான முறையில் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளதா மற்றும் ரேஷன் கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சங்க வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும், கடன் தொகை வழங்குவதிலும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பொருட்களை வழங்குவதிலும் புகார் இருக்கக்கூடாது என அறிவுறுத்தினார். அப்போது, துணைப்பதிவாளர் ரகு, கூட்டுறவு சங்க செயலாளர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை