உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வழக்கில் 15 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கில் 15 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதித்தனர். அவர்களில் 68 பேர் இறந்தனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள், மெத்தனால் சப்ளை செய்தவர்கள் மீது கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் மற்றும் சங்கராபுரம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கு சி.பி.சி.ஐ. டி.,க்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில், சின்னதுரை, ஜோசப், உட்பட 15 பேர் மீது கச்சிராயபாளையம் மற்றும் சங்கராபுரம் ஸ்டேஷன்களிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் காவல் நீட்டிப்பு நேற்றுடன் முடிந்தது.இதனையடுத்து வழக்கை விசாரிக்கும் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்பு நேற்று 13 பேரை நேரடியாகவும், உடல் நிலை சரியில்லாத சடையன், சிவக்குமார் ஆகியோரை கடலுார் மத்திய சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர் படுத்தினர். அவர்கள் 15 பேருக்கும் வரும் 2ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி