உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  துாய்மை பணியாளர் இறப்பு: போலீசில் புகார்

 துாய்மை பணியாளர் இறப்பு: போலீசில் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் பாக்கியராஜ்,39; இவர் நீலமங்கலம் கிராமத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அடுத்த நாள் காலை 5 மணிக்கு நீலமங்கலம் சடையப்பர் கோவில் அருகே குளத்தில் இறந்து மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாக்கியராஜ் மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை