உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடன் பிரச்னை: அ.தி.மு.க., பிரமுகர் தற்கொலை

கடன் பிரச்னை: அ.தி.மு.க., பிரமுகர் தற்கொலை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் கிளைச் செயலாளர் கடன் பிரச்னையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கிழக்கு மருதுாரைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து, 43; அ.தி.மு.க., முன்னாள் கிளைச் செயலாளர். இவருக்கு, கடன் பிரச்னை இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ