நுாலகத்திற்கு இடம் ஒதுக்கியும் பணி துவங்கவில்லை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கான இடம் தேர்வு செய்து ஓராண்டாகியும் இதுவரை பணிகள் துவங்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்படாததால் அதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டிய நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் கட்டடம் பகுதியில் 38 சென்ட் இடத்தை. மாவட்ட நுாலகத்திற்கென ஒதுக்கீடு செய்து கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.இதனால் நுாலக தேவைக்காக அலைக்கழிக்கப்பட்டு வந்த இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், நிதி ஒதுக்கியும், இடம் தேர்வு செய்தும் இன்னும், பணிகள் துவங்காமல் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.