| ADDED : பிப் 23, 2024 03:52 AM
சங்கராபுரம்: தியாகராஜபுரம் ஊராட்சியில் ரு.20 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளதாக ஊராட்சித் தலைவர் சங்கரன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது.தியாகராஜபுரம் ஊராட்சியில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 7 பணிகள் ரூ.7.50 லட்சத்திலும் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6 பணிகள் ரூ.3.50 லட்சம், புதிய பள்ளி கட்டடம் ரூ.25 லட்சம், 2 பள்ளி கட்டடம் புணரமைப்புக்கு ரூ. 4.8 லட்சத்தில் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பொது நிதியில் சிறு பாலம் மற்றும் வடிகால் திட்டத்திற்கு ரூ.3 லட்சம்,15 வது நிதி குழு மானியத்திட்டத்தில் சமையலறை புணரமைத்தலுக்கு ரூ 1.10 லட்சமும், துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைத்தலுக்கு ரூ. 2.15 லட்சம்,15 வது நிதி குழு மானியத்திட்டத்தில் பஜனை கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு ரூ. 2.70 லட்சமும், ஆசாரி தெருவில் புதிய போர் மின் மோட்டார், பைப் லைன் அமைக்க ரூ. 2.68 லட்சமும், ஆசாரி தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ. 4.50 லட்சம், பஜனை கோவில் தெருவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ. 70,000 என பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. வருகிற காலங்களில் சட்ட மன்ற உறுப்பிணர் உதயசூரியன் மற்றும் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன் ஆகியோரது ஆதரவுடன் இந்த ஊராட்சியை முன்னோடி ஊராட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன் தெரிவித்தார்.