உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பட்டாசு கடைகளில் டி.ஆர்.ஓ., ஆய்வு

பட்டாசு கடைகளில் டி.ஆர்.ஓ., ஆய்வு

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் உள்ள பட்டாசு கடைகளில் டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.சங்கராபுரம் நகரில் பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் ஆய்வு செய்தார்.அப்போது கடையின் இரு புறமும் வழி உள்ளதா, தீயணைப்பான் மற்றும் தீயணைப்பு கருவிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, பட்டாசு இருப்பு விபரங்களை கேட்டறிந்தார்.தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் தசரதன், ஆர்.ஐ., கல்யாணி, வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை