| ADDED : நவ 19, 2025 06:42 AM
உளுந்துார்பேட்டை: நவ. 19-: திருநாவலுார் அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில், சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த ஆத்துார் ஊராட்சி, கோட்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 63; கூலித் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 20ம் தேதி இரவு 7.30 மணியளவில் கோட்டையம்பாளையம் அருகே நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 40; என்பவர், பிள்ளையார்குப்பத்திலிருந்து கோட்டையம்பாளையம் நோக்கி ஓட்டிச் சென்ற பைக், ராமச்சந்திரன் மீது மோதியது. படுகாயத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.