உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் இறந்தார். சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 47; நீலகிரி மாவட்டத்தில் மின் ஊழியராக பணி புரிந்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊரான நைனார்பாளையத்திற்கு வந்துள்ளார். கடந்த 2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக அவரது வீட்டில் மின் விளக்குகள் எரியாமல் இருந்துள்ளது. இதனை சரிசெய்வதற்காக கொளஞ்சியப்பன் நேற்று மாலை 4:00 மணியளவில் வீட்டில் மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் சுவிட்ச் போர்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கொளஞ்சியப்பன் மயங்கி விழுந்தார். உடன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே கொளஞ்சியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை