உள்ளூர் செய்திகள்

சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் இருந்த 1,200 லிட்., சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., தீபக்சிவாச் (பொ) உத்தரவின் பேரில், கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, விளாம்பட்டி புதுார் மேற்கு பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊரல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 6 பேரல்களில் இருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி