மேலும் செய்திகள்
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை
13-Dec-2024
சங்கராபுரம் : கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு, வடபாலப்பட்டு, கள்ளிப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் கல்வராயன்மலை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். தொடர்ந்து நன்கு வளர்ந்த பின் சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியில் உள்ள சேகோ மில் உரிமையாளர்கள் மரவள்ளியை வாங்கி செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு அலைச்சல் இன்றி அறுவடை செய்யும் நாளிலேயே பணம் கிடைக்கிறது.
13-Dec-2024