மேலும் செய்திகள்
வாகன சோதனையில் 20 பேர் மீது வழக்கு
8 minutes ago
பஸ் ஸ்டாப்பிங்கில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்
8 minutes ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்கராபுரம் பகுதி அதிகளவில் எள், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, மணிலா மற்றும் பயிரிடுவதில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 3 மாத பயிரான உளுந்து சாகுபடி செய்ய குறைந்த தண்ணீர் போதுமானது. ஒரு மூட்டை உளுந்து விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை போகிறது. அதிக லாபம் தரக்கூடிய தோட்டப்பயிராக உளுந்து இருப்பதால் இதனை அதிகளவில் பயிரிட்டு பயன்பெற்று வருகின்றனர். இதனை ஊடு பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தோட்டக்கலைத்துறை மூலம் சங்கராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 minutes ago
8 minutes ago