உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக இறுதிகட்ட பணி : கலெக்டர் ஆய்வு

 கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக இறுதிகட்ட பணி : கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 27ம் தேதி திறந்து வைக்கவுள்ள நிலையில் இறுதி கட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய மாவட்டம் துவக்கி வைத்தபின்பு, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அரசின் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், 139.41 கோடி மதிப்பில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கட்டுமான பணியில் பெரும்பாலான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 27 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்து, புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலக இறுதி கட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை தரமாக மேற்கொண்டு விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ