| ADDED : டிச 08, 2025 05:33 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் படை வீரர் கொடிநாள் நிகழ்ச்சியில் 150 பேருக்கு, ரூ.1.69 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. முப்படைகளின் வீரர்களின் தியாகம், வீரச் செயல்களை போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் படை வீரர் கொடி நாள் டிச., 7ம் தேதி நடக்கிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் படை வீரர் கொடி நாள் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கடந்தாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ. 84 லட்சத்து 84 ஆயிரம் கொடி நாள் நிதி வசூலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.87 லட்சத்து 75 ஆயிரம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கொடி நாள் நிதி இலக்கினை 100 சதவீதம் மேற்கொண்ட மற்றும் இலக்கிற்கு மேல் நிதி திரட்டிய 31 அரசு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 150 முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பில் பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, ஆர்.டி.ஓ., முருகன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குஜர் ஆயிஜாபேகம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.