மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
23 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, சங்கத் தலைவர் இமானுவேல் சசிக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரோட்டரி செயலாளர் சிவக்குமார், முன்னாள் செயலாளர் சேகர், ஓம் முருகா டைல்ஸ் உரிமையாளர் செந்தில் ஆகியோர் கவுரவிக்கப்பட்டன. கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் பூஜா, சுருதி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்ற 180 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.முகாமில் ரோட்டரி முன்னாள் நிர்வாகிகள் முன்னாள் தலைவர்கள் ராமலிங்கம், செல்வகுமார் மற்றும் இயக்குனர் அம்பேத்கர், செல்வராஜ், கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.பொருளாளர் செல்வ குமார் நன்றி கூறினார்.
19 hour(s) ago
19 hour(s) ago
22 hour(s) ago
23 hour(s) ago