உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எம்.எல்.ஏ., மகன் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதி

எம்.எல்.ஏ., மகன் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதி

உளுந்துார்பேட்டை : ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது 18 வயது மகள் சென்னை பல்லாவரம் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்தார்.இவரை, ஆன்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மரிலினா ஆகியோர் தாக்கி சித்தரவதை செய்து வந்துள்ளனர்.இது குறித்து அந்த பெண் அளித்த புகாரில், திருவெற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையம் கைது செய்தனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை திருநறுங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் குமரகுரு நேரில் சென்று ஆறுதல் கூறி, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி