உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உலகளந்த பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்

உலகளந்த பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் தேர் சக்கரங்கள் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது.திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்நிலையில், தேரின் சக்கரங்கள் பழுதானதைத் தொடர்ந்து, நெய்வேலி, என்.எல்.சி., நிறுவனம் இரும்பால் ஆன தேர் சக்கரங்களை செய்து கொடுத்துள்ளது. புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டு நேற்று காலை 7:00 மணிக்கு தேர் வெள்ளோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். காலை 10:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ