உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பஸ் ஸ்டாப்பிங்கில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

 பஸ் ஸ்டாப்பிங்கில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் அரசு பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்கராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி சாலையில், சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் வரும் பஸ்களில் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் அரசு பஸ்கள் மற்றும் கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் வழியாக திருப்பதி, பெங்களூரு செல்லும் அரசு பஸ்கள் எப்போதும் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. ஆனால் தனியார் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. அரசு பஸ் டிரைவர்களின் அலட்சியத்துடன் செயல்படுவதாக பொது மக்கள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். சங்கராபுரம் நகரில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தத்திலும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தி செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி