மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
21 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் வீரபத்திரன், சாலைப் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் முத்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சுதா, நில அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில துணைத் தலைவர் செந்தில்முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கு ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சாமிதுரை நன்றி கூறினார்.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago