உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு

சங்கராபுரம், : ங்கராபுரம் நகரில் ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சிவசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் அமைத்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்க உள்ளது. இதனால், சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள், மேற்கூரை ஆகியவற்றை தாங்களாகவே ஒரு வாரத்திற்குள் அகற்றிக் கொள்ள வேண்டும்.அகற்றாத பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும். இதனால் ஏற்படும் பொருள் இழப்பிற்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது. மேலும் அகற்றப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை