உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க கையெழுத்து இயக்கம்

 இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க கையெழுத்து இயக்கம்

திருக்கோவிலுார்: இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் திருக்கோவிலுாரில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க திருக்கோவிலுார் கிளையின் சார்பில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் 15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. மாநில தலைவர் மணலி மனோகர் தலைமை தாங்கி, பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை