உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு

திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணமூர்த்தி, 38; தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கஸ்துாரி, 32; இவர் கடந்த, 7ம் தேதி காலை வீட்டை பூட்டி, மீட்டர் பாக்ஸில் சாவியை வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, கதவு திறக்கப்பட்டு, பீரோவை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ