உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூகையூரில் மினி டேங்க் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கூகையூரில் மினி டேங்க் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கள்ளக்குறிச்சி, -சின்னசேலம் அடுத்த கூகையூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மினி குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்தார். சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராஜேந்திரன், (மேற்கு) அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி சேகர், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் முருகேசன், நிர்வாகிகள் பெரியசாமி, செங்கோட்டவன், பெத்தானுார் பிரபு, மாமந்துார் பிரபு, அலம்பலம் பிரபு, கிளைச் செயலாளர் நடேசன், மூக்கன் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை