உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பு

 தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியின் பல பகுதிகளில் சாலையோரம் கழிவுகள் கொட்டி வருகின்றனர். இதனால் நகராட்சியின் பெரும்பாலான பகுதியில் தெரு நாய் மற்றும் பன்றிகள் அதிகரித்துள்ளது. இரவு, பகல் பாராமல் தெரு நாய்கள் கூட்டமாக நகர வீதிகளில் திரிகின்றன. பைக்கில் செல்பவர்களை நீண்ட துாரம் விரட்டிச் செல்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்ல முடிவதில்லை. இதனால் பள்ளி சிறுவர்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை