உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கூட்டுறவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 26ம் தேதி நேர்முகத்தேர்வு

 கூட்டுறவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 26ம் தேதி நேர்முகத்தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையில்காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 26ம் தேதி நேர்முகத்தேர்வு நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள் ள செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பணியிடத்தை நிரப்புவதற்காக ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கடந்த அக்., 11ம் தேதி எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களின் விபரங்கள் https://drbkak.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 26ம் தேதி கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் செயல்படும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. நேர்முக அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை