உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் வேலை வாய்ப்பு முகாம்

 சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் வேலை வாய்ப்பு முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான ராயல் எண்பில்ட் நிறுவணத்தின் சார்பில் நேர்காணல் நடந்தது. இதில் கல்லுாரியில் இறுதியாண்டு இயந்திரவியல், மின்னியல், மின்ணணுவியல் துறையை சார்ந்த 145 பேர் பங்கேற்றனர். நேர்காணலில் கலந்து கொண்ட மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பணி நியமண உத்திரவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரியின் துணை முதல்வர் சிவகங்கா,முதல்வரின் நேர்முக உதவியாளர் சண்முகம்,கல்லுரி பொருளாளர் பாலசுப்ரமணியன்,வேலைவாய்ப்பு அதிகாரி வேல்முருகன், கண்காணிப்பாளர் மீனாகுமாரி மற்றும் அனைத்து துறை தலைவர்கள் முன்னிலையில் ராயல் எண்பில்ட் நிறுவண மனித வள மேம்பாட்டு அலுவலர் அருண்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ