உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கூட்டு குடிநீர் திட்ட பைப் புதைக்கும் பணி வாணாபுரம் மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

 கூட்டு குடிநீர் திட்ட பைப் புதைக்கும் பணி வாணாபுரம் மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

ரிஷிவந்தியம்: வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக நடைபெறும் பைப் புதைக்கும் பணியினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இருந்து ரூ. 17.99 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக மாடாம்பூண்டி கூட்ரோடு, கடுவனுார், கடம்பூர், ஓடியந்தல், மரூர், அரியலுார், அத்தியூர், தொழுவந்தாங்கல், பாக்கம் உட்பட 19 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டது. இப்பணிகள் கடந்த ஜூன் துவங்கியது. இத்திட்டத்தில், 4 நீர் உறிஞ்சும் கிணறு, 10 நீரேற்றும் நிலையம், 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 28 மின்மோட்டார்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சாலையோரமாக பள்ளம் தோண்டி பைப் புதைக்கும் பணியும், அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடியில் தொட்டியும் கட்டப்பட்டு வருகிறது. இதில், வாணாபுரம் பகண்டைகூட்ரோடு பகுதியில் நிலத்தடியில் தண்ணீர் தொட்டி கட்டப்படவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பைப் புதைக்கும் பணியை நேற்று தடுத்து நிறுத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; வாணாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் உப்பின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் கிடைத்தால் இந்த பிரச்னை குறையும் என கருதிய நிலையில், வாணாபுரத்தில் குடிநீர் வழங்க நிலத்தடியில் தொட்டி கட்டப்படவில்லை. ஆனால், எங்கள் ஊர் வழியாகதான் தண்ணீர் பைப் செல்கிறது என புகார் தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பால் பைப் புதைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை