உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

கள்ளக்குறிச்சி ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, வரும் 15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். அதற்கான ஆயத்த மாநாடு கள்ளக்குறிச்சி அரசு ஊழியர் சங்க மாவட்ட கட்டடத்தில் நேற்று நடந்தது.மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், மகாலிங்கம், அனந்தகிருஷ்ணன், அண்ணாதுரை, எழிலரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகிகள் அன்பு, ரவி, சுதா, காஞ்சனாமேரி, சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ரஹீம் போராட்ட விளக்கவுரையாற்றினார்.மாநாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்கள், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கலாநிதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ