| ADDED : டிச 01, 2025 06:02 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், வேப்பூர் பிரைம் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி ஸ்கூல், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் இணைந்து ரோட்டரி சங்க நுாற்றாண்டு மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) செந்தில்குமார், துணை ஆளுநர் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் கார்த்திகா முகாமில் பங்கேற்ற 54 பேருக்கு சிகிச்சை அளித்தனர். அதில் 13 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் ரோட்டரி நிர்வாகி கண்ணன், வேப்பூர் பிரைம் பள்ளி முதல்வர் ரோஷினி குமார், அறங்காவலர்கள் கனிமொழி, தீபன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.