உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு

அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சித் துறை சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உளுந்துார்பேட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கட்டுரைப் போட்டியில் கணிதத்துறை மாணவி சாரதாதேவி முதல் பரிசும், தமிழ்த்துறை மாணவிகள் பேச்சு போட்டியில் தாமரைக்கொடி, கவிதை போட்டியில் மகாகோபிகா ஆகியோர் மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து கல்லுாரி முதல்வர் முனியன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி துறைத் தலைவர் மோட்சானந்தன், வீரலட்சுமி, தர்மராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ