உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம்,45; என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்