உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபைல்போன் பர்ஸ் திருடியவர் கைது

மொபைல்போன் பர்ஸ் திருடியவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பஸ் நிலையத்தில் துாங்கிய நபரிடம் மொபைல்போன், மணிபர்ஸ் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் சிவக்குமார், 43; சென்னை தனியார் ஓட்டல் சப்ளையர். தச்சூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்பதிற்காக சொந்த ஊருக்கு வந்த சிவக்குமார், நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். நள்ளிரவு 1:00 மணிக்கு கள்ளக்குறிச்சியில் பஸ்சுக்காக காத்திருந்தபோது, கையில் வைத்திருந்த பேக் தலையில் வைத்து துாங்கினார். சில நிமிடத்தில் எழுந்து பார்த்தபோது, பேக், மொபைல்போன், பர்ஸ் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ் நிலையத்தில் தேடியபோது, தனது பேக்குடன் சுற்றி திரிந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசாரணையில் பேக் திருடியது சின்னசேலத்தை சேர்ந்த நாகப்பன் மகன் செல்வராஜ், 49; என்பது தெரிந்தது. செல்வராஜிடம் இருந்து பேக் மட்டும் மீட்கப்பட்டது. மொபைல்போன் மற்றும் பர்ஸ் தன்னிடம் இல்லை என செல்வராஜ் தெரிவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் செல்வராஜினை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ